அன்பான நண்பர்களே,
நல்லா இருக்கீங்களா?
உங்களுடைய second internal முடிஞ்சாச்சு. உங்களுடைய percentage அதிகப்படுத்த இன்னும் third internal இருக்கு. உங்களுடைய விடைத்தாளில் நீங்க எழுதும் எழுத்தக்கள், உங்க எதிர்காலத்தை தீர்மானிக்க வல்லவை. உங்களால் முடிந்த அளவுக்கு முழு முயற்சி செய்து பாருங்கள். All the Best!!!!
இப்ப நீங்க இருக்கிற நிலை என்ன? காலேஜுக்கு வர்றீங்க, வகுப்பில staff பேசும் போது அப்அப்ப கொஞ்சம் கவனிச்சீங்க. Exam ல ஒரளவுக்கு மார்க் வாங்குனீங்க, படிப்பு முடிஞ்சுது. கிளம்பியாச்சு!!!
இப்படியேதான் காலங்காலமா, காலேஜ் வாழ்க்கை இயங்குது. வருஷா வருஷம் புதுசா ஒரு batch வந்தாலும், ஏதோ ஒன்னு ரெண்டு பேர தவிர, கேளிக்கை, கூத்துன்னு தான் நிறையப்பேர் வாழ்க்கை ஓடுது. Staff சரியில்லைன்னு students ம், students சரியில்லைன்னு staffசும் காலங்காலமா சொல்லிட்டுத்தான் வர்றாங்க.
ஒரு மாறுதலுக்காக, இப்படியெல்லாம் செய்தால் என்ன?
1. வரவிருக்கும் Semester Exam க்கு படிப்பதற்காக, இப்பயிருந்தே, Libraryயில் பழைய Question Papers எல்லாம் எடுத்து எழுதிவைத்து கொள்ளலாம்.
2. Class ல, Staff பாடத்தை நடத்தி, அதுக்கப்புறம் தான் படிக்க ஆரம்பிக்கணுமா? இன்னும் school குழந்தைகளா நாம்? நாளைக்கு நடத்தப்போகும் பாடத்தை, இன்னிக்கே Libraryயில extra reference பண்ணி, முக்கியமான points களை குறிப்பெடுத்து, படித்துப்பார்த்து, வகுப்பில் பாடம் நடத்தப்படும் போது, சந்தேகங்களை கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.
3. Assignments, Seminar, Record Work இதுக்கெல்லாம் கடைசி ஆளா தான் போய் வைக்கணுமா? அடுத்த Assignment Topic என்ன? எந்த தேதியில சப்மிட் பண்ணனும் அப்படீன்னு, நீங்களாவே Staff கிட்ட கேட்கலாம். Staff கிட்ட Last day அன்னிக்கு போய் Record Book ல Sign வாங்காம, முன்னாடியே, எல்லாம் முடிச்சு, sign வாங்கி, Staffக்கும் உங்களுக்கும் Tension இல்லாம பண்ணலாம்.
4. வெள்ளிக்கிழமை வைத்த Booksஐ திங்கட்கிழமை தான் தொடணுமா? சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், Placement Preparation, Higher Studies இதுக்கெல்லாம் படிக்கலாம்.
5. உங்க வாழ்க்கையில நீங்க அடுத்தது என்ன பண்ணப்போறீங்க ? அதுக்கு யார் அல்லது எது தடையா இருக்குது ? இன்னிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன ? இப்படியெல்லாம் தினமும் கொஞ்ச நேரமாவது யோசிக்கலாம்.
6. English Fluency, Aptitude Skill இந்த ரெண்டும் இருந்தால் மட்டுமே I.T துறையில் வேலை கிடைக்கும். தினமும் கொஞ்ச நேரமாவது இதுக்காக செலவிடலாம்.
7. Passport, Voter's ID, Driving License, Pan Card இதுக்கெல்லாம் இப்பவே apply பண்ணலாம்.
இந்த உலகில், அதுவும் மக்கள் தொகை பெருமளவு இருக்கும் நம் இந்தியாவில், எதற்கெடுத்தாலும் போட்டி. ரேஷனில் மண்னெண்னை வாங்கவும் போட்டி, பஸ்ஸில் சீட் பிடிக்கவும் போட்டி. கல்லூரியில் சீட் கிடைப்பதிலும் போட்டி, படிப்பு முடிஞ்சு வேலை கிடைப்பதிலும் போட்டி.
இப்படி போட்டி போட்டு வெற்றிபெற, நீங்க ஒரு average student ஆ இருந்தா போதுமா? நீங்க இன்னிக்கு எப்படி இருக்கீங்களோ, இப்படியே தொடர்ந்தா, இந்த போட்டி உலகில் உங்களால் ஜெயிக்க முடியுமா?
நேற்று எப்படி படிச்சீங்களோ, எப்படியெல்லாம் முயற்சி எடுத்தீங்களோ, அதைவிட ஒரு துளியாவது இன்னிக்கு அதிகமா செஞ்சா, இப்படியே தினமும் தொடர்ந்தா, அதுவே உங்களுடைய வழக்கமாகிவிடும். அப்புறம் எல்லாமே ஈஸியாகிவிடும்.
இன்னும் முன்நூறுக்கும் குறைவான நாட்களே இருக்கு இந்த course முடிய. சராசரி மாணவனாக இன்று நீங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு சிறந்த மாணவனாக வாழும் வாய்ப்பு உங்களுக்கு இப்ப கிடைச்சிருக்கு.
இதை பயன்படுத்துவதும், கைவிடுவதும் உங்க கையில தான் இருக்கு.
"முயற்சி தவறலாம், முயற்ச்சிக்க தவறலாமா?" - கவிதாசன்.
அன்புடன், Directors, Project Banyan
1. Which company has "Larry Ellison" as its CEO?
2. Who is CEO of Tata Consultancy Services?
கடந்த மாத கேள்விகளுக்கு சரியான விடைகளை முதலாவதாக
அனுப்பிய நண்பர் V.Muthukumar, 2nd Bsc(c.s) .
நம்பிக்கைவிதை
பத்துமுறை விழுந்தவனிடம், பூமி முத்திமிட்டுச்சொன்னதாம், நீ ஒன்பது முறை எழுந்தவனென்று!!!அறிவோம் abbreviation.
1. ICICI -Industrial Credit and Investment Corporation of India .
2. CRM - Customer Relationship Management.