அன்பு கண்மணிகளே,
எப்படி டா இருக்கீங்க? செமஸ்டர் ரிசல்ட் வந்தாச்சு!.
இப்ப வந்திருக்கிற இந்த முடிவு, உனக்கு ஏறுமுகமாகவோ, இறங்கு முகமாகவோ, இல்ல எதிர்பாரததாகவோ அமைஞ்சிருக்கலாம். எப்படி இருந்தாலும், இப்ப இருந்து, அடுத்து என்ன பண்ணப் போறீங்கங்கிறது தான் முக்கியம்.
ஒரு சின்ன உதாரணம் -
ஓட்டப்பந்தயம் நடக்குது. அதுல, முதலாவதா ஓடி வர்ரவர் நினைக்கிறாரு, "நம்ம தான், முதல் இடத்துல வந்துட்டோமே, இனிமே இதே மாதிரி வேகத்துலயே போனாம்னா, ஜெயிச்சுருலாம்"னு.
அதே போட்டியில கடைசியா வர்ரவர் நினைக்கிறாரு, "நம்ம கடைசி இடத்துல இருந்தாலும், இப்பயிருந்து, இன்னும் கொஞ்சமாச்சும் வேகமா ஓடுனா, எப்படியும் ஒரு சில இடமாவது முன்னுக்கு வந்துருலாம்"னு. இப்படி யோசிச்சவரு, கொஞ்ச கொஞ்சமா வேகத்த கூட்டி, முதலாவதாவும் வந்திர்ராரு.
இதுல தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா, நீங்க எந்த மாதிரி மார்க் வாங்கியிருந்தாலும், இன்னும் நல்லா முயற்சி பண்ணா, இது வரைக்கும், நீங்க வாங்காத மாதிரி அதிகமான மார்க் கூட எடுக்கலாம்.
அன்புக்கண்மணிகளே, படிக்கிறதுக்கு தான் நீங்கெல்லாம் காலேஜ்கே வர்றீங்க. உங்களுக்கு படிப்ப தவிர எதுலயும் கவணம் வேண்டாம். Internal Testல நீ வாங்கற மார்க்,இந்த semஓட பெர்சன்டேஜ்கு ஹெல்ப் பண்ணும். இப்ப இருந்தே, நல்லா focus பண்ணுங்க.
இன்னும் நல்லா ட்ரை பண்ணுங்க. தொடர்ந்து 90% எடுக்க ட்ரை பண்ணுங்க. மிஸ் ஆச்சா, இன்னொரு வாட்டி ட்ரை பண்ணுங்க. உங்களுக்கு 90% எடுக்க முடியுமான்னு சந்தேகமா கூட இருக்கலாம். பெரிய மலை மாதிரி தோணலாம்.
பெரிய மலைய அப்படியே தூக்கீட்டு போறது எப்படி கஷ்டமோ, அப்படித்தான் தெரியும் 90% எடுக்கிறதும். பெரிய மலைய, ஒரு உளி வச்சு, சின்னச்சின்ன துண்டுகளா உடைச்சிட்டா, அப்புறம், அது அவ்வளவு சிரம்மமா இருக்காது. 90% அப்படிங்கிறது, நீங்க externalல மட்டும் இல்ல, internalsலயும் எடுக்கணும்.
இனி வரப்போற முதல் internal testல, எல்லா subjectsலயும், 90% வாங்கிற மாதிரி ready ஆகுங்க. இது தான் உங்களுடைய அடுத்த குறிக்கோள். அதுக்காக, இனிமே ஒவ்வொரு Class ஐம் நல்லா கவணிங்க. லெக்சரர் பேசறத கூர்ந்து கேளுங்க. சந்தேகம் வந்தா உடனே கேளுங்க.
தினமும் வீட்டுக்கு போனப்புறம், classல என்னென்ன பாடம் நடந்துச்சோ, அதெல்லாத்தையும் ஒரு தடவை திருப்பிப்பாருங்க. உங்க friendsக்குள்ள, உங்களுக்கு புரிஞ்சத, discuss பண்ணுங்க. சந்தேகம் இருந்தா staff கிட்ட கேளுங்க. இப்படி ஆர்வமான studentsக்கு doubt clear பண்ண, எல்லா staffம் சந்தோஷப்படுவாங்க.
Classல எல்லாரும் என்ன நினைப்பாங்கன்னு தோணுச்சுனா, லஞ்ச்ல மீட் பண்ணி கேளுங்க. இல்ல நோட் ல எழுதியாவது வைங்க. ஆனா, கண்டிப்பா ஒரு நாள், எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுகணும். உங்களுடைய Internal test எல்லாத்துலையுமே நீங்க நல்லா பண்ணீட்டீங்க அப்படீன்னா, semester exam ஒன்னும் பெரிய கஷ்டமில்ல.
90% வாங்கிற அளவு திறமை, உங்க எல்லாருக்குமே இருக்கு. Examக்கு ஒரு நாள் முன்னாடி, bookஅ திறந்து பாத்தா, கஷ்டமா தான் இருக்கும். இப்ப இருந்தே தொடர்ந்து படிச்சா, ஈசியா இருக்கும். உங்க future அப்படீங்கிறது, இப்ப, நீங்க at Present, என்ன பண்றீங்க அப்படீங்கிறத பொருத்தே அமையுது.
உங்களுடைய நோக்கம் என்னவோ, அதுக்காக, தொடர்ந்து முயற்சி செஞ்சா, நிச்சயமா அது நிரைவேறும். தொடர் முயற்சியினால, முட்டைக்குள்ள இருக்கிற கரு கூட உரு பெறுது.
இன்னைக்கு, எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் தொடர்முயற்சின் விளைவால் கிடைத்தவை தான்.
நீங்க புரிஞ்சுக்கவேண்டியது இது மட்டும் தான். முயற்சி!! தொடர்ச்சி!! வளர்ச்சி!!!!
உங்களுக்காக, படிப்பு சம்பந்தமா, என்ன மாதிரி help பண்ணவும், நம்ம Project.Banyan Team தயாரா இருக்கு.
உற்சாகமா படீங்க கண்மணிகளே!!
ஆல் தி பெஸ்ட்!!!!
அன்புடன்,
Directors, Project.Banyan
Friday, July 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
goodone
Post a Comment