Monday, July 21, 2008

திசைகாட்டி

திசைகாட்டி
படிப்பதில், வேலைக்கு தயாரவதில், தகவல் தொடர்பில், வாழ்க்கை பற்றிய புரிதலில், உங்களுக்கு தெளிவையும், நம்பிக்கையையும், ஆர்வத்தையும் அளிப்பதே இந்த மடலின் நோக்கம். "திசைகாட்டி" என்ற தலைப்பில், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்படவுள்ளது.

இந்த வாரக்கடிதம் -
அன்பான நண்பர்களே,

எப்படி இருக்கீங்க?

உங்களுடைய முதலாவது இலக்கு (கோல்), இந்த செமஸ்டரில் 90% மார்க் வாங்குது. இதை அடைய, அனைத்து internal examகளிலும் நல்ல மார்க் எடுப்பது என்று முடிவெடுத்தோம்.

உங்களுக்கு இது தெரிந்து இருக்கலாம். எப்பவுமே, Lab Practicalகளில், அதிக மார்க் வாங்க முடியம். 100% எடுக்கும் வாய்ப்புகள் இதில் அதிகம். ஆகவே, Labல் அதிக நேரம் programs எல்லாம் பயிற்சி செய்து பாருங்கள்.

முதலில், (Aim of the program), எதற்காக இந்த program எழுதுகிறோம் என்று புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த மொழியில்(C, Java) program எழுதினாலும், அதில், variable, if condition, Loop போன்றவை இருக்கும்.

program மனப்பாடம் செய்யக்கூடாது. உங்களுக்கு பழக்கமாகும் வரை, சின்னச்சின்ன programகளை எழுதிப்பாருங்கள்.

உங்கள் பெயரை உள்வாங்கிக்கொண்டு அதை reverse orderல் காட்டுங்கள்,
உங்கள் பெயரில் உள்ள எழுத்துக்கள் (Length) எத்தனை என்று காட்டுங்கள்,
உங்கள் பெயரில் உள்ள (vowels - a,e,i,o,u) எத்தனை என்று காட்டுங்கள்.

programming என்பது நீங்கள் சொந்தமாக எழுதிப்பழக வேண்டும். Extra lab timeவாங்கி, பயிற்சி செய்யுங்கள்.

நீங்க இப்ப படிக்கும் இந்த UG Degreeயில், சரிபாதி நாட்கள் முடிந்துவிட்டது. அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று முடிவெடுத்து, அதற்கான செயலில் இறங்கவேண்டிய தருணம் இது.

ஆகவே, உங்களுடைய 2வது இலக்காக, "வேலைக்கு போவதாகவோ", "PG படிப்பதாகவோ", அல்லது "இந்த இரண்டில் எது கிடைத்தாலும்" என்றோ, உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றையோ வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக, நீங்கள் MCA அல்லது MBA படிக்க வேண்டும் என்றால் TANCET என்ற தேர்வை எழுத வேண்டும்.

1. TANCET Exam என்றால் என்ன? எப்போது நடக்கும்?
2. எப்படி தயாராக வேண்டும்? வினாக்கள் எப்படி இருக்கும்?
3. எத்தனை மார்க் வாங்கினால் Engineering Collegeல் PG seat கிடைக்கும்?

இது போன்ற உங்களுடைய இன்ன பிற சந்தேகங்களுக்கு முதலில் விடை காணுங்கள்.

உங்களுடைய seniors, aided-unaided staffs, MCA students, Alumni என்று எல்லோரிடமும் இதை பற்றியெல்லாம் கேளுங்கள். Internetலும் தேடுங்கள். அடுத்து, இந்த இலக்கை எப்படி அடையப்போகிறீர்கள் என்று திட்டமிடுங்கள்.

அதாவது, ஒரு இலக்கை நிர்ணனயித்து, அதை அடைவதற்கான திசையை (Way) தேர்வு செய்து, அதற்கொரு பாதை(Plan) அமைத்து, அதில் வேகத்தை கூட்டினால், அது அடைவது உறுதி.

உங்கள் புரிதலுக்காக,

இலக்கு என்பது MCA படிப்பது.
திசை என்பது TANCET எழுதுவது.
பாதை என்பது Coaching, Self Study, Group Study போன்றவை
வேகம் என்பது இதற்காக தினமும் படிப்பது. Model Test எழுதுவது போன்றவை.

நீங்கள் சரியான பாதையில் போனாலும், சரியான வேகத்தில் போனால் தான், இலக்கை அடைய முடியும்.

காலண்டரில் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும், இன்னும் 3 செமச்டர்களில் முடியப்போகிறது இந்த படிப்பு. நீங்கள் கல்லூரி வகுப்புகளில் செலவிட போகும் நாட்கள் 300க்கும் குறைவானதே.

காலம் கரையும் முன், நல்ல முடிவை எடுத்து, அதற்கான செயலை சீக்கிரம் மேற்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கைப்பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறது Project Banyan Directors குழு.

அன்பும், வாழ்த்தும்,
Team Project Banyan.


தெரிந்திடு சீர்சேம்
நமது IT துறை சம்பந்தமான கேள்விகள் இந்த பகுதியில் இடம் பெறும்.

Who is the CEO of Infosys?

What is the name of the company which has Steve Ballmer as CEO ?

சரியான விடையை, உங்கள் பெயர் மற்றும் வகுப்பின் பெயருடன், project.banyan@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.

நம்பிக்கைவிதை
ஊக்கமளிக்கும் கவிதை வரிகள் இடம்பெறும் பகுதி.

விரிக்கும் வரை
சிறகும் பாரம் தான்.
விரித்துப்பார்! வானம்,
தொட்டுவிடும் தூரம் தான்!!

எழுதியவர் - விஜய் ராணிமைந்தன்,
vijayrindia@gmail.காம்

அறிவோம் Abbreviation
முக்கியமான 2 வார்த்தைகளும் அவற்றின் விளக்கங்களும்.

NASSCOM - National Association of Software and Services Companies
ERP - Enterprise resource planning


No comments: